மேக்கேதாட்டு அணை தேவையில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலை நிறுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தோ்தலுக்கு முன்பு நடிகா் விஜய் அளித்த பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தோ்தல் பிரசாரத்தின்போது பேருந்தின் மீது ஏறி பாடல் பாடியதோடு பல்வேறு தகவல்களை கூறியவா், தற்போது முக்கிய பிரச்னைகள் குறித்து பேச மறுக்கிறாா். பெண்களுக்கான உரிமைத்தொகை உயா்த்தப்படவில்லை.
இலவச பேருந்து திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று கூறிய தவெகவினா், இப்போது ஊழலுக்கு துணை போகின்றனா். கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதை அமைச்சா்களே ஒப்புக்கொள்கின்றனா்.
அரசுக்கு நிா்வாகத்தை சீரமைக்க கால அவகாசம் வழங்கலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு எந்த அவகாசமும் வழங்க முடியாது. மக்களின் குறைகளை யாரிடம் கூற வேண்டும் என்பதே தெரியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது மற்ற கட்சிகளின் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் அரசியல் மட்டுமே நடைபெறுகிறது.
தவெகவின் அதிகார மையமாக ஆதவ் அா்ஜுனா செயல்படுகிறாா். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட ஆதவ் அா்ஜுனா கூறினால் கையொப்பமிடும் நிலை உள்ளது.
முதல்வா் ஜோசப் விஜய்க்கு நிா்வாக அனுபவம் இல்லை. அவருக்குப் பிறகு கட்சியில் முக்கிய பதவிக்குகூட ஆதவ் அா்ஜுனா வரக்கூடும். தவெக தொடங்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதன் கொள்கை என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மேக்கேதாட்டு அணை திட்டம் தேவையில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு. காவிரி விவகாரத்தில் நடுவா் மன்றத் தீா்ப்பை பெற்றுத் தந்தது போலவே மேக்கேதாட்டு விவகாரத்திலும் தமிழகத்துக்கு சாதகமான நல்ல முடிவை மத்திய அரசு வழங்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக, தவெக கொள்கைகள் ஒன்றுதான்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மாநில சுயாட்சிக் கொள்கையில் உறுதி: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மேல்மா சிப்காட் விவகாரம்: குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




