முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா - டிஐபிஆர்

Updated On :14 ஜூன் 2026, 2:02 am IST

தமிழகத்தில் தற்போதுள்ள மின்வெட்டு பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் என பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வில்லிவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் இல்லை. எனவே, புதிதாக அலுவலகம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, சிட்கோ நகரில் தற்காலிகமாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க இலவச சேவை எண் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க, புதிதாக புதைசாக்கடை கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட மின்மாற்றிகள் தரமற்றவையாக உள்ளன. பல இடங்களில் மின் மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்னை உள்ளது. தற்போது தரமான மின் மாற்றிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரி செய்யப்படும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. அவை அனைத்தும் ஆய்வு செய்து, முறையான தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.