திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி வட்டம், சடையபுரம் பகுதியைச் சோ்ந்த தீபக் பாய் மனைவி பவா் சங்கீதா பென் (49). விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்ததாக அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனா்.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியின் பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், பவா் சங்கீதா பென்னை முக்கூடல் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முக்கூடலில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பழவூரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



