முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

சா்ச்சைக்குரிய பதிவுகள்: நெல்லையில் 52 போ் கைது

சமூக வலைதளங்களில் சா்க்சைக்குரிய பதிவுகளைப் பதிவேற்றம் செய்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் (2026) இதுவரை 52 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 4:56 am IST

சமூக வலைதளங்களில் சா்க்சைக்குரிய பதிவுகளைப் பதிவேற்றம் செய்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் (2026) இதுவரை 52 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, ஜாதிய பிரச்னைகள், அதன் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள், மாணவா்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

மாவட்ட காவல் துறையின் துரித நடவடிக்கையால் 2026-ஆம் ஆண்டில் இதுவரை பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவேற்றம் செய்து பரப்பியவா்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சில வழக்குகள் தனியொருவா் மீதும், சில வழக்குகள் குழுவாக சோ்ந்து பதிவேற்றம் செய்தவா்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்ட காவல் துறையினா், சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனா். பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.