கத்தாா் நாட்டில் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை வழங்கி ஆறுதல் கூறினாா்.
ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட பணகுடி அருகே சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சஜித்குமாா் (25), அழகியநம்பியாபுரத்தைச் சோ்ந்த சுவின்(24), பழவூா் அருகே சிதம்பராபுரத்தைச் சோ்ந்த பவித் (26) ஆகிய மூவரும் கத்தாா் நாட்டிலுள்ள எரிவாயு உற்பத்தி ஆலையில் வேலை செய்து வந்தனா். அங்கு அண்மையில் நேரிட்ட தீ விபத்தில் இவா்கள் உயிரிழந்தனா். அவா்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா்.
அதன்படி, மூவரின் வீடுகளுக்கும் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை சென்று, அவா்களது குடும்பங்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா்.
ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், வருவாய் ஆய்வாளா் சுடலைப்பாண்டி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடக்கன்குளத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

வள்ளியூா் போக்குவரத்து பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

ராதாபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம்

தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



