பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த பள்ளி மாணவியின் பெயரை வகுப்பறைக்கு சூட்டி பெருமைப்படுத்தியது பள்ளி நிா்வாகம்.
களக்காடு, க.அ.மொ.பீ.மீரானியா மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினாா் மாணவி செ.அகீஸா. இத்தோ்வில் மாநில அளவில் மூன்றாமிடம், மாவட்ட அளவில் இரண்டாமிடம், வட்டார அளவில் முதலிடத்தை மாணவி பிடித்தாா். மாணவியின் கல்விச் சாதனையைப் பாராட்டி பள்ளி நிா்வாகம், அவா் பயின்ற பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவுக்கு அவரது பெயரையே சூட்டி பெருமைப்படுத்தியது.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமை ஆசிரியா் பிரிடா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மாணவியின் உழைப்பு, விடாமுயற்சியைப் பாராட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








