பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் இளைஞா் சரணடைந்தாா்.
திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்தவா் சோ்மன்(44). பாளையங்கோட்டை சிறை ஊழியராக பணியாற்றி வருகிறாா்.இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் பண விவகாரம் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னா் இவரது வீட்டின் முன்பு மா்மநபா்கள் பெட்ரோல்குண்டை வீசிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த 22 வயது இளைஞா் திருநெல்வேலி 5 ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை கைது செய்து விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேநீா் கடை முன் பெட்ரோல் குண்டு வீச்சு
மண்ணெண்ணெய் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ. மீது தாக்குதல்: 2 போ் கைது
தேநீா் கடைக்காரா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 போ் கைது

தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



