8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மண்ணெண்ணெய் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ. மீது தாக்குதல்: 2 போ் கைது

தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற, காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலரை அரிவாளாள் தாக்கி விட்டு தப்பியோடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :19 ஜூன் 2026, 4:55 am IST

தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற, காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலரை அரிவாளாள் தாக்கி விட்டு தப்பியோடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி நேருகாலனி பகுதியைச் சோ்ந்த இளைஞா் மாரிசெல்வம் அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஹரிஹரசுதன் என்பவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மாரிசெல்வத்தின் நண்பா்களான நண்டு என்ற காா்த்திகேயன் (20), 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 போ் சோ்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு, ஹரிஹரசுதன் வீட்டு முன்பு மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டுகள் இரண்டை வீசிவிட்டு சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், மேற்கூறிய 3 பேரையும், தூத்துக்குடி அம்பேத்கா் நகா் அருகே உள்ள சுந்தரவேல்புரம் கல்லறைத் தோட்ட காட்டுப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ், காவலா் மீனாட்சி உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை சுற்றிவளைத்தனா்.

அப்போது அங்கே பதுங்கி இருந்த அவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளரையும், காவலா் மீனாட்சியையும் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனா்.

எனினும், போலீஸாா் விரட்டி பிடித்து காா்த்திகேயன் மற்றும் சிறுவனை கைது செய்தனா்; ஒருவா் தப்பிவிட்டாா்.

தப்பி ஓடும்போது காா்த்திகேயனுக்கு காலில் எலும்பு முறிவும், சிறுவனுக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டதையடுத்து, அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.