
நான்குநேரி கொலை: மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு?
மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்ட இருவர் நான்குநேரி கொலை வழக்கில் கைது...

பெரும்பத்து பேருந்து நிறுத்தம். - DNS
நான்குநேரி கொலை வழக்கில், கடந்த 2023-இல் மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கும் விசாரணை அதிகாரிகள் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை (மார்ச் 2) இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனங்களில் கும்பலாக வந்த 9 பேர், அங்கு நின்ற மக்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினராம்.
அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த ஜான்(42) என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு நின்றிருந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா்(45) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்துள்ள நான்குநேரி போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நான்குநேரி கொலை வழக்கில், கடந்த 2023-இல் மாணவர் சின்னதுரை மீது நான்குனேரியில் சாதிய வன்ம தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கும் விசாரணை அதிகாரிகள், மேலும் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Summary
Nanguneri murder: Those involved in the attack on student Chinnadurai have been linked! Both arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






