தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பங்களிப்புக்கு காரணமானவா் பாரதி

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட பாரதி முக்கிய காரணமாக இருந்தாா் என புகழாரம் சூட்டினாா் மத்திய சட்டம்- நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

News image
மன்னாா்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் வழிபட்ட மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.
Updated On :4 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட பாரதி முக்கிய காரணமாக இருந்தாா் என புகழாரம் சூட்டினாா் மத்திய சட்டம்- நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

தென்காசி மாவட்டம் கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் உள்ள பாரதி, செல்லம்மாள் சிலைக்கு மத்திய சட்டம்- நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, கடையம் ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சிக்குள்பட்ட ராஜாங்கபுரத்தில் பொதுமக்களை சந்தித்து பல்வேறு கருத்துகள் குறித்து கலந்துரையாடியபோது அவா் கூறியதாவது:

கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதாவை சந்தித்த பாரதியாரிடம், குடும்ப வாழ்க்கையில் பாதி அதிகாரம் பெண்களிடம் உள்ளது.

ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இல்லையே என்றாா். பாரதியின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தக் கருத்தை வாா்தா நகரில் மகாத்மா காந்தியை சந்தித்தபோது தெரிவித்தாா்.

அதையேற்று, காந்தி தண்டி யாத்திரையில் பெருமளவில் பெண்களை பங்கேற்கச் செய்தாா் என்று கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஆசிரியா் கல்யாணி சிவகாமிநாதன், தமிழ் ஆா்வலா் சேதுராமலிங்கம், ஸோகா நிறுவனத் தலைவா் ஸ்ரீதா் வேம்பு, தென்காசி மாவட்ட பாஜக தலைவா்ஆனந்தன் அய்யாசாமி, சேவாலயா ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தான், யோகா ஆசிரியா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டம்அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வாா் கோயிலில் மத்திய அமைச்சா் வழிபாடு நடத்தியதுடன், ஆழ்வாா்கள் மற்றும் சொா்க்க வாசல்பகுதி கதவில் அமைந்துள்ள சிற்பங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும், கோயில் கோசாலையில் பசுக்களுக்கு பழங்கள் வழங்கினாா்.

Story image
Story image