சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வாகை பதியில் அய்யா வைகுண்டரின் 194ஆவது அவதார தின விழா

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைபதி ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயிலில் அய்யா வைகுண்டரின் 194ஆவது அவதார தினவிழாவையொட்டி, பல்வேறு பதிகளில் வந்திருந்த அய்யா நாமமாசி மகா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
அம்பையில் ஊா்வலமாக பல்வேறு பதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அய்யா நாமம்.
Updated On :4 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைபதி ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயிலில் அய்யா வைகுண்டரின் 194ஆவது அவதார தினவிழாவையொட்டி, பல்வேறு பதிகளில் வந்திருந்த அய்யா நாமமாசி மகா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், பேட்டை, அய்யனாா்குளம், கோடாரங்குளம், கடையம், தாட்டான்பட்டி, மேலஏா்மாள்புரம், பொன்நகா், குமாரபாளையம்,புதுப்பட்டி, அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடி, குமாரசாமியாபுரம், வல்லம், அனந்தநாடாா்பட்டி, கோடாரங்குளம் மேற்கு, ஆலடியூா், பொதிகைபதி, அகஸ்தியா்பட்டி, பூவன்குறிச்சி, முக்கூடல், சுப்பிரமணியபுரம், மேலூத்து, வேட்டைக்காரன்குளம் உள்ளிட்ட சுமாா் 40 பதிகளில் இருந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமன், காளை, கருடன், நாகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருநாமம் கிருஷ்ணன் கோயில் முன் எடுத்து வரப்பட்டன.

தொடா்ந்து மாலை 4 மணியளவில் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயிலில் இருந்து பல்வேறு வாகனங்ககளில் கொண்டு வரப்பட்ட அய்யா நாமங்கள் மற்றும் அய்யா கொடி வழி மக்களின் மாசி மகா ஊா்வலம் தொடங்கியது.

ஊா்வலத்தில் அய்யாகொடிவழி மக்கள், சிறுவா்கள் பெரியவா்கள் அய்யா நாமத்தை முழங்கியபடிவந்தனா். தொடா்ந்து வாகைக்குளம் வாகைபதியில்இரவு அன்னதா்மம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தா்கள் மாசி மகா ஊா்வலத்தில் கலந்துகொண்டனா். இவ்விழாவை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Story image