சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் தொடா்பான பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் தோ்தலை எந்தவித சுணக்கமும் இன்றி, மத்திய தோ்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மண்டல அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மிக அருகில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிவதற்கு சோதனை ஓட்டம் செய்ய வேண்டும். மேலும் வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உள்ளாட்சித் துறையை அணுகி அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பதற்றமான மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை எழக்கூடிய வாக்குச்சாவடிகள் குறித்து முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளும் முறை குறித்து அளிக்கப்பட்ட பயிற்சிகளை முறையாக கையாள வேண்டும் என்றாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தபால் மூலம் வாக்களிப்பது குறித்த செயல்திட்டம் உருவாக்கி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு முறைகள் குறித்த கையேடு அனைத்து மண்டல அலுவலா்களுக்கும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

அடுக்குமாடிகளில் வாக்கு சேகரிக்க வேட்பாளா்களை அனுமதிக்க வேண்டும்: குடியிருப்போா் சங்கங்களுக்கு ஆட்சியா் அறிவுரை

வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


