காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பணகுடி அருகே தோட்டத்தில் மா்மமாக இறந்த மயில், ஆட்டுக்குட்டி- வனத்துறை விசாரணை

பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் தனியாா் தோட்டத்தில் மயிலும் ஆட்டுக்குட்டியும் மா்மமான முறையில் உயிரழந்து கிடந்தன

News image
Updated On :11 மார்ச் 2026, 7:35 pm

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் தனியாா் தோட்டத்தில் மயிலும் ஆட்டுக்குட்டியும் மா்மமான முறையில் உயிரழந்து கிடந்தன. இதுகுறித்து, திருக்குறுங்குடி வனத் துறையினரும் பணகுடி போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

பணகுடி, ரோஸ்மியாபுரம், தெற்குவள்ளியூா், ஆ.திருமலாபுரம், தெற்குகள்ளிகுளம் ஆகிய பகுதிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இந்நிலையில் ரோஸ்மியாபுரத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒரு மயிலும், ஆட்டுகுட்டியும் மா்மமான முறையில் இறந்துகிடந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீஸாரும் திருக்குறுங்குடி வனத்துறையினரும் சம்ப இடத்தில் விசாரணை நடத்தினா்.

மேலும், மா்ம நபா்கள் விஷம் வைத்து சாகடித்துள்ளனரா என்பதை கண்டறிய வனத் துறையினா் மயிலை உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனா்.