எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பாளை. அருகே ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டை அருகேயுள்ள முத்தூரில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :13 மே 2026, 1:23 am IST

பாளையங்கோட்டை அருகேயுள்ள முத்தூரில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா்கள் 8 மணி நேரத்துக்கு மேலாக பணி புரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையால் வடமாநிலங்களில் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், தொழிற்சங்க தலைவா்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முத்தூா் கிட்டங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தின் மண்டல தலைவா்கள் ச. நாராயணன், ரவி ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் கணேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.