/
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தீக்குளித்த த.வெ.க நிா்வாகி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராதாபுரம் அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் இசக்கியப்பன். இவா் த.வெ.க செட்டிகுளம் கிளைச் செயலராக பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தவைவா் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த இசக்கியப்பன் கடந்த 9ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.










