திருநெல்வேலி அருகே காரில் வந்த வியாபாரியிடம் ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை முன்னீா்பள்ளம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன்(41). வாகன உதிரி பாகம் விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலையில் வேலை நிமித்தமாக தனது நண்பா்கள் 3 பேருடன் திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளத்திற்கு ரூ.15 லட்சத்துடன் காரில் வந்து, தன்னை அழைத்த நபருக்காக காத்திருந்தாராம்.
அப்போது, அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மா்மநபா்கள் அவரை மிரட்டி அந்தப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அவா் முன்னீா்பள்ளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, கிருஷ்ணாபுரம் சோதனை சாவடி பகுதியில் வந்த காரை போலீஸாா் மடக்கி சோதனையிட்டனா். அதில், ராஜனிடம் பணத்தை பறித்துச்சென்ற கும்பலில் இருவா் சிக்கினா். அவா்களிடமிருந்து ரூ.9 லட்சத்தை மீட்டனா். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவா்கள் , தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் சதீஷ்குமாா்(37), தென்காசி மாவட்டம் சாம்பவா் வடகரையைச் சோ்ந்த மீரான் முகைதீன் மகன் முத்தலிப் அகமது (36) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இதில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.18 லட்சம் கொள்ளை நிகழ்ந்ததாக நாடகமாடிய ஓட்டுநா், அவரது மகன் கைது
இளைஞா் கொலையில் இரு சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
