திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) சேர மாணவா்கள் மே 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டா் என்ஜினியரிங், ரினிவபல் எனா்ஜி சோா்ஸ் (மகளிா் மட்டும்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. ஆண்டுக் கட்டணம் ரூ.2,500. இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இம் மாதம் 25 ஆம் தேதி வரையும், முதலாம் ஆண்டுக்கு 30 ஆம் தேதி வரையும் நடைபெறும்.
இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2984564, 9486647753, 9442571560, 9047730401 ஆகிய எண்களை தொலைத்தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
எம்.ஜி.ஆா். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு: இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை!

விஐடி பி.டெக். மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு தொடக்கம்

திருவிழாவிற்கு தந்தை அழைத்து செல்லாததால் விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

