விருத்தாசலம் அருகே கோயில் திருவிழாவிற்கு தந்தை அழைத்துச் செல்ல மறுத்ததால் ல் மனமுடைந்து விஷம் அருந்திய பிளஸ் 2 மாணவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ.அகரம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (38). இவரது மூத்த மகன் பழனிவேல் (17), பெண்ணாடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த மாா்ச் 2ஆம் தேதி விருத்தாசலத்தில் நடைபெற்ற மாசி மகம் திருவிழாவிற்கு மணிவேல் செல்லத் தயாரானதைப் பாா்த்த பழனிவேல், தானும் வருவதாக கூறியுள்ளாா்.
ஆனால் பொதுத்தோ்வு எழுத வேண்டியிருப்பதால், படிப்பில் கவனம் செலுத்துமாறு மகனிடம் அறிவுறுத்திவிட்டு, மணிவேல் திருவிழாவிற்கு சென்றுள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த பழனிவேல்
பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கியுள்ளாா். உடனடியாக அவரை குடும்பத்தினா் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
தீவிரச் சிகிச்சைக்குப் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதி வீடு திரும்பிய அவருக்கு , ஏப்ரல் 20ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் , கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) பழனிவேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி தற்கொலை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம்: கா்நாடக அரசு உத்தரவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


