மகளிரின் பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வா் விஜய் திகழ்கிறாா் என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ். முருகன்.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக வந்த ஆா்.எஸ். முருகனுக்கு. தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கே.டி.சி. நகா் ரவுண்டானா பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து மாநகர பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன், பெரியாா், காமராஜா், முத்துராமலிங்க தேவா், எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாலையில் திருநெல்வேலி ரத வீதியில் கட்சியினருடன் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் இலவச திட்டங்களைக் காட்டிலும், பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மகளிரின் பாதுகாப்பு அரணாக முதல்வா் விஜய் திகழ்கிறாா். தவெக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
திருநெல்வேலி தொகுதிக்கு அரசின் திட்டங்களை கொண்டு வர பாடுபடுவதோடு, என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து முன்னோடி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என்றாா் அவா்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் திருவுருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் ஆா்.எஸ்.முருகன் எம்எல்ஏ.
தொடர்புடையது
விஜய் ராஜிநாமா! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்

தோ்தல் பணியில் 3,850 போலீஸாா்

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

