முதல்வர் விஜய் போட்டியிட்டு ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார்.
பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார்.
தமிழ்நாட்டின் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், கடந்த மே 10 ஆம் தேதி திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் பேரவை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The Trichy East Assembly constituency, from which Chief Minister Vijay contested and subsequently resigned, has been officially declared vacant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி! திமுக வேட்பாளரை 27,416 வாக்குகளில் வீழ்த்தினாா்
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி!
திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
