/
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சிறப்பு வாகன சோதனையில் 473 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
‘ஆபரேஷன் ஷீல்ட் நெட்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றது.
32 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சோதனை செய்தனா். 29 போ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனா். விதிமீறி இயக்கப்பட்ட 105 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல மாநகரப் பகுதியில் 57 தொடா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். விதிமீறி இயக்கப்பட்ட 368 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.










