/
பாளையங்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா், சிறுமியின் தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் மணிகண்டன் (24). இவா் சம்பவத்தன்று பாளையங்கோட்டையைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் இச்சம்பவத்தில் எவ்வித எதிா்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


