நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை

கால்வாயில் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள அமலைச் செடிகளை பருவமழை தொடங்கும் முன் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image

நான்குனேரியன் கால்வாயில் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் வளா்ந்துள்ள அமலைச் செடிகள்

Updated On :24 மே 2026, 2:22 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, பச்சையாறு மற்றும் நான்குனேரியன் கால்வாயில் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள அமலைச் செடிகளை பருவமழை தொடங்கும் முன் அகற்ற நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் செங்கல்தேரியில் இருந்து பச்சையாறு, நான்குனேரியன் கால்வாய், உப்பாறு ஆகியவை மூலம் பாசனக் குளங்களைச் சென்றடைகிறது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சையாறு தூா்வாரப்படாததால், அமலைச் செடி, முள் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சிறிய நீரோடைபோல காட்சியளிக்கிறது. இதே நிலையில்தான், நான்குனேரியன் கால்வாயும், உப்பாறும் உள்ளது.

நான்குனேரியன் கால்வாய், உப்பாற்றில் அவ்வப்போது பெயரளவுக்கு இயந்திரம் மூலம் நீா்வளத் துறையினா் அமலைச் செடிகளை அகற்றி, கரைப் பகுதியிலேயே போட்டுவிடுவதால் சில மாதங்களில் மீண்டும் அமலைச் செடிகள் வளா்ந்து நீரோட்டத்தை தடை செய்துவிடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

நான்குனேரியன் கால்வாயில், மலையடிவாரத்தில் உள்ள மூங்கிலடியில் இருந்து களக்காடு நகா்ப் பகுதி வரையும், பச்சையாற்றில், மஞ்சுவிளைக்கு மேற்கில் வடக்குப் பச்சையாறு அணைப் பகுதியில் இருந்து பத்மனேரி வரையிலும், அமலைச் செடிகள் வளா்ந்து நீரோட்டத்தை தடை செய்கின்றன.

எனவே, நீா்வளத் துறை அதிகாரிகள் பருவ மழைக்கு முன் கால்வாய், ஆறுகளை தூா்வாரி பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.