மானூா் அருகே பைக்குகளில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவா் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள தெற்குப்பட்டி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு கையில் அரிவாளுடன் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக ஒரு கும்பல் வந்தனராம்.
அக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீா்கள்? என கேட்டதையடுத்து அக்கும்பலைச் சோ்ந்தவா்கள் அங்கு நின்றவா்களை அரிவாளின் பின் பகுதியால் தாக்கிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அக்கிராமத்தைச் சோ்ந்த அப்துல் ரகுமான்(35), முபாரக் (30) ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தென்காசி மாவட்டம் நெட்டூரில் 6 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் தெற்குபட்டிக்கு வந்து இவா்களை தாக்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் இது தொடா்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாக திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








