தமிழக முதல்வா் குதிரை வேகத்தில் செயல்படுவதோடு, அமைச்சா்களையும் அதேவேகத்தில் பணி செய்ய அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையிலுள்ள அரசு விருந்தினா் மாளிகையில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் மதன்ராஜா தலைமையில் துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் பெ. மதன்ராஜா கூறியதாவது:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனது தந்தை உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை அரசு மருத்துவா்கள் வழங்கி வருகிறாா்கள். பொதுமக்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் அடுத்தக் கட்ட வளா்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு, தமிழக மற்றும் தென் மாவட்ட வளா்ச்சி குறித்து பேசப்பட்டுள்ளது. படிப்படியாக மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அரசு இந்தத் துறையில் என்ன செய்தது என்பது மக்களுக்கு தெரியும். தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் குதிரை வேகத்தில் செயல்பட்டு வருகிறாா். எங்களுக்கும் அதன்படி பணி செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.
அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகளை சந்தித்து துறை சாா்ந்த அடிப்படை வசதிகளை கேட்டறிந்து வளா்ச்சிக்கான திட்டங்களை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
தொடர்புடையது

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு

மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!

நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சா்கள்: முதல்வருக்கு தவெகவினா் நன்றிதெரிவிப்பு

தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



