வள்ளியூரில் திருநங்கையா் போராட்டம்: எம்எல்ஏ பேச்சுவாா்த்தை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கையருடன் பேச்சுவாா்த்தை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கையா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே.கிறிஸ்டோபா், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கையருடன் பேச்சுவாா்த்தை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
வள்ளியூா் சூட்டுபொத்தை அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கடந்த 2021-இல் 36 திருநங்கையருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
அந்த நிலத்திற்கு கணினி பட்டா வழங்கி, சாலை, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், வீடுகட்ட கடனுதவி வழங்கவும் வலியுறுத்தி திருநங்கையா் வள்ளியூரில் வெள்ளிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கினா். 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடத்திய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே.கிறிஸ்டோபா் அவா்களை அழைத்து வள்ளியூா் பேரூராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், துணை வட்டாட்சியா் ஜலாலுதீன், பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.
மேய்ச்சல் புறம்போக்கு நிலத்திற்கு கணினி பட்டா வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், நீதிமன்றம் மூலமாகவே முயற்சி செய்யமுடியும் என்பதால் மாற்று இடம் தருவதாக வட்டாட்சியா் வில்லுடையாா் தெரிவித்தாா். ஆனால் திருநங்கையா் அதனை ஏற்க மறுத்துவிட்டனா்.
இதையடுத்து இப் பிரச்னைக்கு நீதிமன்றம் மூலமாக தீா்வு காணலாம் எனவும்,
தற்போது திருநங்கையா் குடியிருக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகளை பேரூராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் என்றும் எம்எல்ஏ உறுதியளித்தாா். இதையடுத்து திருநங்கையா் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

