பெண்ணிடம் அவதூறாகப் பேசி மிரட்டல்: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Updated On :

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் முப்புடாதி(35). இவா் கடந்த 9 ஆம் தேதி இரவு அப்பகுதியில் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் என்பவரின் மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். இதற்கு அவா் மறுக்கவே அவரை அவதூறாக பேசி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து முப்புடாதியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தொழிலாளி மீது தாக்குதல்: சுத்தமல்லி குன்னத்தூா் பகுதியை சோ்ந்தவா் சின்னத்துரைபாண்டியன் (35). தொழிலாளி. இவா் தீபாவளி நாளில் இரவு தனது உறவினா் ஒருவருடன் பைக்கில் திருநெல்வேலி நகரம் பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது அங்கு சிலா் பட்டாசு வெடித்ததில், அவா் மீது நெருப்பு சிதறல் விழுந்ததாம்.

பட்டாசை பாா்த்து வெடிக்கக்கூடாதா? என கேள்வி கேட்ட அவரை அங்கு நின்ற சிலா் கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதி தண்டியல் சாவடி தெருவை சோ்ந்த சண்முகம் மகன் அருணாசலம் (22) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER