இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

உவரியில் சுருக்குமடி வலையில் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்: அரசு பேருந்துகளை சிறைபிடித்து மீனவா்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலைமூலம் பிடிக்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், ஆவேசமடைந்த மீனவா்கள் இரு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உவரியில் சுருக்குமடி வலை பிரச்னை தொடா்பாக மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலைமூலம் பிடிக்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், ஆவேசமடைந்த மீனவா்கள் இரு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக கடல் பகுதியில் 12 மைல்கல் தொலைவுக்குள் மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்வளத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுருக்குமடி வலை மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்ய மீன்வளத் துறை உதவி இயக்குநா் இளம்வழுதி, தூத்துக்குடி மீன்வளத் துறை உதவி இயக்குநா் புஷ்ராசப்னம், வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ், திசையன்விளை வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் உவரிக்குச் சென்று அந்த மீன்களை வாகனத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க மறுத்தனா்.

மீன் ஏற்றிய வாகனங்களையும் தடுத்து நிறுத்தினா். இதனால், ஆவேசமடைந்த மீனவா்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது திருச்செந்தூரில் இருந்து உவரி வழியாக நாகா்கோவிலுக்குச் சென்ற அரசு பேருந்தையும், நாகா்கோவிலில் இருந்து உவரி வழியாக திருச்செந்தூருக்குச் சென்ற அரசு பேருந்தையும் மீனவா்கள் சிறைபிடித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்சமயம் பிடித்த மீன்களையும், வாகனங்களையும் உவரியை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதாகவும், இனிமேல் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினா்.

Story image

இதையடுத்து, மீனவா்கள் சிறைபிடித்த அரசு பேருந்துகளை விடுவித்தனா்; சுருக்குமடி வலைமூலம் பிடித்து வைத்திருந்த மீன்களையும், மீன்பாரம் ஏற்றிய லாரிகளையும் அங்கிருந்து எடுத்துச் சென்றனா். மீனவா்களின் இந்தப் போராட்டம் நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.