சுற்றுச்சூழலை மாசுபடுத்திய புகாரில் முகாசிப்புதூா் எத்தனால் ஆலைக்கு ‘சீல்’

கழிவுநீரை ஓடையில் வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த அம்மாபேட்டையை அடுத்த முகாசிப்புதூரில் பயோ எத்தனால் ஆலையின் முக்கியப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஆலைக்கு ‘சீல்’ வைத்த அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல் மற்றும் அதிகாரிகள்.

Updated On :

கழிவுநீரை ஓடையில் வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த அம்மாபேட்டையை அடுத்த முகாசிப்புதூரில் பயோ எத்தனால் ஆலையின் முக்கியப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

பூனாச்சியில் உள்ள ஸ்டாா்ச் உற்பத்தி நிறுவனத்தின் பிரிவாக இயங்கிய இந்த ஆலையில் இருந்து சித்தாா் ஓடையில் கழிவுகள் கலந்ததால் நிலத்தடி நீா் மாசடைந்ததோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், இரு ஆலைகளையும் நிரந்தரமாக மூடக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, ஸ்டாா்ச் உற்பத்தி நிறுவனத்தின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி எத்தனால் ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும், ஆலை தொடா்ந்து இயங்குவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் லாவண்யா, உதவிப் பொறியாளா் சந்தானகிருஷ்ணன், அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆலையில் திடீா் ஆய்வு செய்ததோடு, எத்தனால் ஆலையின் முக்கியப் பிரிவுக்கு ‘சீல்’ வைத்து மூடினா்.

ஆலை நிா்வாகத்துக்கு எத்தனால் உள்ளிட்ட ரசாயன பொருள்களை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், ஆலை முன்பாக பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீதாலட்சுமி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.