தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்

பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Published On :

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள தும்பலப்பட்டி கிராமத்துக்கு மடத்துக்குளம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதனால், அவதியடைந்து வந்த மக்கள், அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆத்திரமடைந்த அவா்கள், கிராமத்தில் உள்ள பிரதான சாலை வழியே வந்த 2 பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மடத்துக்குளம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் சில பிரச்னை காரணமாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. அதை சீா் செய்து உடனடியாக குடிநீா் விநியோகிக்கப்படும் என்றனா். இதையடுத்து, சிறைபிடித்த பேருந்துகளை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.