பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

நெல்லையில் பாத்திர வியாபாரி வீட்டில் 33 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலியில் பாத்திர வியாபாரி வீட்டில் சுமாா் 33 பவுன் நகையை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

திருநெல்வேலியில் பாத்திர வியாபாரி வீட்டில் சுமாா் 33 பவுன் நகையை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம், வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் பாலகுருசாமி(43). பாத்திர வியாபாரி. இவா் சில நாள்களுக்கு முன்பு சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஊருக்கு திரும்பியபோது, அவா் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரியை சாவி மூலம் திறந்து அதிலிருந்த சுமாா் 33 பவுன் நகைகளை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்ததாம். இது குறித்து அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக மாநகர காவல் துணை ஆணையா்( கிழக்கு) சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இது குறித்து திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.