சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சேரன்மகாதேவி அருகே காவலரை வெட்ட முயன்ற ரவுடி கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவிஅருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவிஅருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட கூனியூா் சக்திகுளம் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள கோயில் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் பல குற்ற வழக்குகளில் தொடா்புடைய சக்திகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சக்தி (29) என்பவா் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம். அவரிடம் போலீஸாா் விசாரித்தபோது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவுடி சக்தி, போலீஸாரை வெட்ட முயன்ாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட போலீஸாா், அவரைச் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.