தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தண்ணீர் தகராறு: தம்பதியை மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோயில் பூசாரி! கோவையில் அதிர்ச்சி

கோவையில் தண்ணீரை வெளியேற்றும் பிரச்னையில் தம்பதியை கோயில் பூசாரி ஒருவர் மண்வெட்டியால் வெட்ட முயன்ற சம்பவம் பற்றி...

coimbatore

தம்பதியை மண்வெட்டி கொண்டாட துரத்திய கோயில் பூசாரி.. - DIN

Published On :

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் தொட்டி நீரை வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோயில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள காமாட்சியம்மன் கோயில் பூசாரியாக ராமசாமி என்பவர் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மகேஸ்வரன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், பூசாரி ராமசாமி தனது வீட்டுத் தண்ணீர் தொட்டியில் (Overhead Tank) இருந்து நிரம்பி வழியும் நீரைச் சாலைக்குத் திருப்பி விட்டுள்ளார். இதனால், அருகே நடைபெற்று வரும் மகேஸ்வரனின் வீடு கட்டும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இதனையடுத்து மகேஸ்வரனும், அவரது மனைவியும் பூசாரி ராமசாமியிடம் சென்று, "தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரைச் சாக்கடைக் கால்வாய்க்குத் திருப்பி விட்டால், சாக்கடையும் தூய்மையாகும்; எங்களது வீடுகட்டும் பணிகளுக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும்" என்று நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த பூசாரி ராமசாமி, தம்பதியுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ராமசாமி, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி மீது வீசித் தாக்கினார். மேலும், ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தம்பதியை வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பூசாரி ராமசாமி தம்பதியைத் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற அதிர்ச்சி தரும் காட்சிகள் அங்கே இருந்தவர்களால் விடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஒரு சிறிய தண்ணீர் தகராறு, பெரிய பிரச்னையாக மாறுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு, வன்முறையில் ஈடுபட்ட பூசாரி ராமசாமி மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

Summary

Temple Priest Attempts to Hack Couple with a Spade Shocking Incident in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.