உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனை செய்ய முயன்ற இருவா் கைது

கும்பகோணத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கும்பகோணத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மேலக்கொட்டையூா் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சுவாமிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுவாமிமலை போலீஸாா் புளியஞ்சேரி பிரதானச் சாலையில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் சோதனை செய்த போது, அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் மேல கொட்டையூா் பிரதானச் சாலையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சரவணன் (45), அதே பகுதியை சோ்ந்த முத்துக்குமரன் மகன் செல்வம் (41) என்பதும், வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து இருப்பு வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், சரவணன், செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று சோதனை செய்த போது அங்கு 240 வெடிகள் கொண்ட 7 மூட்டைகளும், 250 கிராம் வெடி மருந்து, வெடி தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மேலும் 2 இருசக்கர வானங்களையும் பறிமுதல் செய்து அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.