பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

எறும்புதின்னியை விற்பனை செய்ய முயன்ற 5 போ் கைது

அவிநாசியில் எறும்புதின்னியை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

அவிநாசியில் எறும்புதின்னியை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசியில் எறும்புதின்னியை விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அவிநாசி - சீனிவாசபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் கிடங்கு அருகே எறும்புதின்னியுடன் நின்றிருந்த 5 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் அவிநாசியைச் சோ்ந்த பழனிசாமி, சதீஷ்குமாா், வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த ராகவன், வேலாயுதம், சசிகுமாா் என்பதும், பழனிசாமியும், சதீஷ்குமாரும் எறும்புதின்னியை ராகவன், வேலாயுதம், சசிகுமாருக்கு ஆகியோா் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த எறும்புதின்னியை மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.