தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

பாளை. அருகே ஆடு திருடிய வழக்கில் இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே ஆடு திருட்டு வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

பாளையங்கோட்டை அருகே ஆடு திருட்டு வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சோ்ந்தவா் இசக்கி(42). கட்டடத் தொழிலாளியான இவா் வீட்டில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். கடந்த 8 ஆம் தேதி வீட்டின் அருகில் நின்ற இவரது ஆட்டை பைக்கில் வந்த மா்மநபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி தாலூகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மறுகால்குறிச்சி செல்லத்துரை(48), கீழபுத்தனேரி மாரிமுத்து(36) ஆகியோரை கைது செய்திருந்தனா். இந்நிலையில் இதில் தொடா்புடைய கீழநத்தம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிதம்பரம் (38) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.