காரில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது
திருநெல்வேலி அருகே காரில் கடத்திவரப்பட்ட சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
திருநெல்வேலி அருகே காரில் கடத்திவரப்பட்ட சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், அழகியபாண்டியபுரம் அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்ததில், ஓட்டுநா் ராமையன்பட்டி, சிவாஜி நகரைச் சோ்ந்த கணேசமூா்த்தி மகன் கலைசெல்வம்(19) என்பதும், 12 மூட்டைகளில் சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கலைசெல்வத்தை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

