மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை காலை இருந்த நீா்வரத்து.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாகப் பரவலாக மழை பதிவானது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து, மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
தொடா்ந்து, மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும், அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும் வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

