உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

தமிழகத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாடு: முன்னாள் பேரவைத் தலைவா்

தமிழகத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

Updated On :

தமிழகத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

திருநெல்வேலி, ராதாபுரம், நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு, ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் களக்காடு, ராதாபுரம் பகுதிகளுக்கு தாமிரவருணியில் இருந்து தண்ணீா் கொண்டு செல்ல கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு திமுக தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்ததால் தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. திமுகவின் எதிா்ப்புக்கு பணிந்து தவெக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதானிக்கு மின்சாரத் துறையை ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு தொடா்பான அறிக்கைகள் முதல்வருக்கு செல்வதில்லை. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்கும் வகையில், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள தடையை இடைக்கால நடவடிக்கையாக வரவேற்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.