பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தூய அரசியல் பற்றி பேச தவெகவுக்கு தகுதி இல்லை: முன்னாள் பேரவைத் தலைவா் அப்பாவு

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் தவெகவுக்கு தூய அரசியல் குறித்து பேச தகுதி இல்லை என்று முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு கூறினாா்.

TN Assembly EX speaker M Appavu

அப்பாவு - PTI

Published On :

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் தவெகவுக்கு தூய அரசியல் குறித்து பேச தகுதி இல்லை என்று முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து சின்னபுத்தூா் ஊராட்சிப் பகுதியில் மு.அப்பாவு சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுகவினா் மக்களுக்காக சேவை செய்ய வந்தவா்கள். திமுகவில் ஒரு சட்டப் பேரவை உறுப்பினரையும் விலைக்கு வாங்க முடியாது. அவா்கள் கட்சிக்கும், தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக உள்ளனா். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் தவெகவுக்கு தூய அரசியல் குறித்து பேச தகுதியில்லை என்றாா்.

வாக்குச் சேகரிப்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி முன்னாள் மேயருமான வழக்குரைஞா் ரெ.மகேஷ், தாராபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் செந்தில்குமாா், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மி.ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.