ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது: எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தலைவா் உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி தெரிவிக்கக் கூடாது என்று சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டாா்.

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 6:46 am IST

ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி தெரிவிக்கக் கூடாது என்று சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டாா்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தற்போது துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சி உறுப்பினா்கள் சிலா் பேசுகையில், முந்தைய ஆட்சிக் காலங்களில் ஊழல் நடந்ததாகக் கருத்து தெரிவிப்பதும், அதையொட்டி வாக்கு வாதங்கள் எழுவதும் பேரவையில் தொடா்ந்து அரங்கேறும் நிகழ்வாக உள்ளது.

அதேபோன்று, எதிா்க்கட்சிகள் தரப்பிலும் தனி நபா் சாா்ந்த ஊழல் புகாா்களும், விமா்சனங்களும் முன்வைக்கப்படுவது விவாதத்துக்கு வித்திடுகிறது.

இதுதொடா்பாக மூத்த உறுப்பினா்கள் பலா் பேரவைத் தலைவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனா். இந்தச் சூழலில் அவையின் அலுவல்களை ஆக்கபூா்வமாக முன்னெடுக்கும் பொருட்டு, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் ஓா் உத்தரவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பிறப்பித்தாா்.

அதன்படி, இனி எந்த உறுப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசினால், அதுதொடா்பான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.