ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

இடைத்தோ்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசன் அறிவிப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் தவெக கூட்டணியான ‘மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’க்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் தவெக கூட்டணியான ‘மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’க்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக தவெக அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறாா்கள். முன்னாள் முதல்வா் காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகிற தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் மக்களுக்கு நோ்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிா்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறாா்.

குறிப்பாக, குறைந்த நாள்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறாா் அவா். இதன்மூலம் காமராஜா், ஜி.கே.மூப்பனாா் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.