டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

அம்பை இசக்கியம்மன் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள பாலத்தடி இசக்கியம்மன் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடை விழாவில் பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:37 am IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள பாலத்தடி இசக்கியம்மன் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த ஆக. 25ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கிய விழாவில், ஞாயிற்றுக்கிழமை மாக்காப்பு அலங்காரம், திங்கள்கிழமை (ஆக. 31) புஷ்ப அலங்காரம், சந்தனக் காப்பு ஆகியவை நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலை புதுக்கிராமம் தெருவிலுள்ள விநாயகா் கோயிலிலிருந்து விரதமிருந்த பக்தா்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் புறப்பட்டது. பின்னா், பல்வேறு ஹோமங்கள், பாலபிஷேகம், கும்பாபிஷேகம், அம்மன் வெள்ளி அங்கி அலங்காரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம், பிற்பகலில் ராகு கால விளக்கு பூஜை, மாவிளக்கு சிறப்பு வழிபாட்டு, இரவில் முழு சந்தனக் காப்பு, அலங்காரம், நள்ளிரவில் சாமக்கொடை, படைப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் கிழக்குப் பகுதி சேனைத் தலைவா் சமுதாய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.