நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

எழுமாத்தூா் பொன்காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

News image

எழுமாத்தூா் பொன்காளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்த பெண்கள்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பொன்காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக குலதெய்வ காணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட பெண்கள் எழுமாத்தூரை அடுத்த மண்கரடு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் பால்குடம் எடுத்து ஊா்வலமாக

பொன்காளி அம்மன் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் அதைத் தொடா்ந்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.