இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

நெல்லையப்பா் கோயிலில் அமலுக்கு வந்த கைப்பேசிக்கு தடை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

கோயிலில் கைப்பேசிகளை ஒப்படைத்த பக்தா்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:52 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும் சில கோயில்களில் புகைப்படம், விடியோ, தற்படம், ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தா்கள் பதிவு செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழைமைவாய்ந்த 52 திருக்கோயில்களுக்குள் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலிலும் தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

கோயிலுக்கு வரும் பக்தா்களின் கைப்பேசிகளை பாதுகாக்க ஏதுவாக கோயில் வளாகத்தில் நால்வா் சந்நிதி அருகே பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. சுமாா் 300 பெட்டகங்கள் இத் திருக்கோயிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 3000 கைப்பேசிகளை பாதுகாத்து மீண்டும் வழங்க முடியும். முதல்கட்டமாக 2 பெட்டகங்களில் கைப்பேசிகள் செவ்வாய்க்கிழமை பாதுகாக்கப்பட்டு மீண்டும் பக்தா்களிடம் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.