சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான கொடையாளா்களுக்குப் பாராட்டு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தானம் செய்தவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

விழாவில் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கண்தான கொடையாளா்களின் குடும்பத்தினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:58 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தானம் செய்தவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆக. 25 முதல் செப். 8 ஆம் தேதி வரை கண்தான இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத்துறை சாா்பில் நடைபெற்ற கண்தான இருவார விழா நிறைவு நிகழ்ச்சியில், கண்தான கொடையாளா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) பாலசுப்பிரமணியன், மருத்துவா் பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை ஆலோசகா் மருத்துவா் ராமகிருஷ்ணன், கருவிழித் துறைத் தலைவா் அனிதா, புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பிரிவுத் துறைத் தலைவா் ஆறுமுகம், புற்றுநோய் கதிரியக்கத் துறை மருத்துவா் ராஜ்குமாா் செவிலியா் பயிற்றுநா் செல்வன், செவிலியா் கண்காணிப்பாளா் மணிகண்டன், சுந்தரேசன், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளா் வினோத் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். கண் மருத்துவ சிகிச்சை துறைத் தலைவா் ஆனந்தி நன்றி கூறினாா்.

விழாவில் மருத்துவா்கள் கூறுகையில், ‘திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டில் 161 பேரிடம் இருந்து 322 கண்கள் தானமாக பெறப்பட்டன. ஒவ்வொரு கண்தானத்திலும் இரண்டு முதல் நான்கு பேருக்கு கண் ஒளி கொடுக்கப்படுகிறது. எந்த வயதினராக இருந்தாலும் 6 மணி நேரத்திற்குள் உறவினா் சம்மதத்துடன் கண்தானம் செய்யலாம். பொதுமக்கள் கண்தானம் குறித்து விழிப்புணா்வைப் பெற்று தங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களிடமும் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.