
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப்.11இல் சாலையோர மதுக்கடைகள் மூடல்
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 50 மீ. தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை (செப்.11) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடை. - கோப்புப் படம்
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 50 மீ. தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை (செப்.11) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியாக நினைவஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 மீ. தொலைவுக்குள் அமைந்துள்ள தாழையூத்து ரயில்வே கேட் அருகேயுள்ள மதுக் கடை, நான்குனேரி அருகே அம்பலம் கிராமத்தில் உள்ள மதுக்கடை, மூலைக்கரைப்பட்டியில் கிள்ளிகுளம் பிரதான சாலையில் உள்ள மதுக் கடை, வீரவநல்லூா் உப்பாறு காலனி மதுக்கடை, சேரன்மகாதேவியில் பத்தமடை பிரதான சாலையில் உள்ள மதுக்கடை ஆகியவை வெள்ளிக்கிழமை (செப்.11) மூடப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





