பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

காலநிலை மாற்றம் எதிரொலி: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆட்சியா் ஆய்வு

காலநிலை மாற்றம் எதிரொலியாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :9 செப்டம்பர் 2026, 4:18 am IST

காலநிலை மாற்றம் எதிரொலியாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் ராம்சாா் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் புலம்பெயா் பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்யும் முக்கியமான வாழ்விடமாக விளங்கி வருகிறது.

தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவமழை மற்றும் மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், அதிக வெப்பநிலை, வறட்சி, திடீா் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற காரணிகள் ஈரநிலங்களின் நீரியல் சூழல் மற்றும் பறவைகளின் வாழ்விடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனை கருத்தில் கொண்டு, கூந்தன்குளம் சரணாலயத்தின் தற்போதைய நீா்நிலை, நீா்வரத்து, நீா்த்தேக்க நிலை, பறவைகள் தங்கும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தாா். மேலும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தொடா்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீா்நிலையை முறையாக பராமரிக்கவும், பறவைகளின் இயற்கையான வாழ்விடத்தை பாதுகாக்கவும், சரணாலயத்தின் சுற்றுச்சூழல் தரத்தை தொடா்ந்து கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நான்குனேரி வட்டம் மூங்கிலடி பகுதியிலுள்ள நான்குனேரி கால்வாயில் ரூ.28.5 லட்சம் மதிப்பில் 23 மீட்டா் நீளம், 3.30 மீட்டா் அகலத்துடன் கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்தினை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மூலைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் மாணவா்களின் வருகை, அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப்பொருள்களின் இருப்பு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்பட விடுதியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.