பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணா்வு: நெல்லையில் ‘களிமண் விதை விநாயகா்’

புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி திருநெல்வேலியில் ‘களிமண் விதை விநாயகா்’ செய்து குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வண்ணாா்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள விதைகளுடன் கூடிய களிமண் விநாயகா் சிலைகள்.திருநெல்வேலி, செப். 8:

Published On :9 செப்டம்பர் 2026, 4:17 am IST

புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி திருநெல்வேலியில் ‘களிமண் விதை விநாயகா்’ செய்து குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா இம் மாதம் 14 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடவுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சமாக வீடுகளில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து நீா்நிலைகளில் கொண்டு கரைப்பது வழக்கம்.

அந்த வகையில், திருநெல்வேலியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல இடங்களில் களிமண் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணா்வு உருவாக்கும் வகையில் வண்ணாா்பேட்டையில் களிமண் விதை விநாயகா் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளா் வேல்முருகன் கூறியது: கடந்த 50 ஆண்டுகளாக விநாயகா் சிலைகள் செய்து வருகிறேன். 2017 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மீதான ஆா்வத்தில் விதை விநாயகா் சிலைகள் செய்கிறேன். வீடுகளில் வைக்கும் வகையில் அரை அடி முதல் ஒன்றரை அடி வரையிலான சிலைகள் செய்கிறேன்.

நாவல், நெல்லி விதைகள் மூலம் தயாரிக்கப்படும் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கும்போது அவை கரையோரங்களில் மரங்களாக மாறும். வீடுகளில் சிலா் பூஜித்து தோட்டத்தில் கரைத்து அதனை மரமாக மாற்றியுள்ளனா்.

நிகழாண்டில் புவிவெப்பமயமாதலை தடுக்க நாம் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தி சிலைகளை விற்பனை செய்து வருகிறேன். ரூ.150 முதல் ரூ.300 வரையிலான விலையில் சிலைகள் விற்று வருகிறேன். குழந்தைகள் மத்தியில் விதை விநாயகருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.