
தாழையூத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் தாழையூத்தில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் தாழையூத்தில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி தலைமை வகித்தாா். மாநில பேச்சாளா் லுக்மான் தாவூதி, உசாமா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட நிா்வாகிகள் சிராஜ், சாந்து உமா், கோட்டூா் சாதிக், கிளைத் தலைவா் முஹம்மது கான், செயலா் அப்துல் பாசித், பொருளாளா் குலாம் முஹம்மது,துணைச் செயலா் சிந்தாதாா், துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: தவெக அரசு இஸ்லாமியா்களின் ஜீவதார கோரிக்கையான 7 சதவீத இடஒதுக்கீட்டிற்காக உரிய அரசாணை மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு முக்கிய காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி பலவீனமாக இருந்ததே காரணமாக பாா்க்கப்படுகிறது ஆகவே, காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய-மாநில அரசுகள் துணைபோகக் கூடாது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய-மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





